Views: 367 இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் அவர்களும் அவரது தூதுக்குழுவினரும் 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தனர். தூதுவரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இரு நாடுகளுக்குமிடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஃபுல்பிரைட் புலமைப்பரிசில் திட்டம் வழங்கியுள்ள பங்களிப்பைப் பாராட்டியதுடன், அத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்துதல், இலங்கையை அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடமாக விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியன குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பு உட்பட, கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அமெரிக்காவின் சமாதானப் படையினூடாக (U.S. Peace Corps) நடைமுறைப்படுத்தப்படும் ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் குறித்தும், இலங்கையின் ஆங்கில மொழிக் கல்வியை பலப்படுத்துவதற்கு அத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்புக் குறித்தும் தூதுவர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார். பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதன் மூலம், இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதற்குத் தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டேவிட் மேயர்ஸ் அவர்களும் அவரது தூதுக்குழுவினரும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களும், பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்த அவர்களும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவுப் பணிப்பாளரும் கலந்துகொண்டனர். ශ්රී ලංකාවේ ඇමරිකා එක්සත් ජනපද තානාපතිවරයා සහ අග්රාමාත්යතුමිය අතර හමුවක්. ශ්රී ලංකාවේ ඇමරිකා එක්සත් ජනපද තානාපති එරික් මේයර් මහතා සහ එම දූත පිරිස 2026 ඔක්තෝබර් 27 වැනි දින අරලියගහ මන්දිරයේදී අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය හමුවිය. තානාපතිවරයා පිළිගත් අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය, දෙරට අතර අධ්යාපනික හා පර්යේෂණ සහයෝගීතාව ශක්තිමත් කිරීම සඳහා ෆුල්බ්රයිට් ශිෂ්යත්ව වැඩසටහන ලබා දී ඇති දායකත්වය අගය කළ අතර, එම වැඩසටහන තවදුරටත් පුළුල් කිරීමේ වැදගත්කම ද අවධාරණය කළාය. ද්විපාර්ශ්වික වෙළෙඳ හා ආර්ථික සබඳතා පුළුල් කිරීම, සංචාරක ක්ෂේත්රයේ සහයෝගීතාව ශක්තිමත් කිරීම සහ ශ්රී ලංකාව ඇමරිකානු සංචාරකයන්ගේ ආකර්ෂණීය ගමනාන්තයක් ලෙස ප්රවර්ධනය කිරීමේ අවස්ථා පිළිබඳව දෙපාර්ශ්වය සාකච්ඡා කළහ. සමුද්රීය අභියෝගවලට මුහුණ දීම සඳහා වන සහයෝගීතාව ඇතුළුව සමුද්රීය ආරක්ෂාව තවදුරටත් ශක්තිමත් කිරීමේ වැදගත්කම ද මෙහිදී සාකච්ඡාවට කෙරිණි. ඇමරිකා එක්සත් ජනපදයේ සාම බලකාය (U.S. Peace Corps) විසින් ක්රියාත්මක කරනු ලබන ඉංග්රීසි භාෂා පුහුණු වැඩසටහන සහ ශ්රී ලංකාවේ ඉංග්රීසි භාෂා අධ්යාපනය ශක්තිමත් කිරීම සඳහා එම වැඩසටහනෙන් ලබාගත හැකි දායකත්වය පිළිබඳව ද තානාපතිවරයා අග්රාමාත්යතුමිය දැනුවත් කළේය. අන්යෝන්ය වශයෙන් වැදගත් ක්ෂේත්රයන්හි සහයෝගීතාව ශක්තිමත් කිරීම තුළින් ශ්රී ලංකාව සහ ඇමරිකා එක්සත් ජනපදය අතර දිගුකාලීන ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා දෙපාර්ශ්වයම සිය වගවීම යළිත් තහවුරු කරන ලදී. මෙම හමුවට කොළඹ ඇමරිකා එක්සත් ජනපද තානාපති කාර්යාලයේ නියෝජ්ය දූත මණ්ඩල ප්රධානී ඩේවිඩ් මයර්ස් මහතා සහ එම දූත පිරිස, අග්රාමාත්ය ලේකම් ප්රදීප් සපුතන්ත්රි මහතා, අග්රාමාත්ය අතිරේක ලේකම් සගරිකා බෝගහවත්ත මහත්මිය සහ විදේශ කටයුතු අමාත්යාංශයේ යුරෝපා හා උතුරු ඇමරිකා අංශයේ අධ්යක්ෂවරයා සහභාගී වූහ. Post navigation හිටපු ජනපති ගෝඨාභය කොටුව මහේස්ත්රාත් අධිකරණයට. ඩිජිටල් පරිවර්තනය තුළින් කාන්තා ව්යවසායකයන් සවිබල ගැන්වීමට සැලසුම්.