Post Views: 249 இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லங்கா ரைட்” (Lanka Ride) மிதிவண்டிப் போட்டி இன்று (16ஆம் திகதி) காலை 9:00 மணிக்கு லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் ஆரம்பமானது. இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, அமைச்சின் செயலாளர் அருண பண்டார மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி வருஷமான, ஆசிரியர் பீட பணிப்பாளர் சிசிர யாப்பா மற்றும் இராணுவம், விமானப்படை, பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். போட்டியின் முதலாம் நாள் கண்டி நகரில் நிறைவடைந்தது. இதன் இரண்டாம் கட்டம் நாளை கண்டியில் ஆரம்பமாகி அனுராதபுரம் வரை நடைபெறவுள்ளது. 18ஆம் திகதி போட்டி அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கித் திரும்பும். இந்த சுற்றுப்போட்டியில் 27 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். பதிவுகளைத் தொடர்ந்து போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் கட்ட முடிவுகள் (கண்டி): 01,முதலிடம்: எச்.டபிள்யூ.எம்.எஸ். பிந்து (இலங்கை இராணுவம்) – நேரம்: 2 மணி 52 நிமிடம் 41 வினாடிகள். 02,இரண்டாமிடம்: ஏ.டி.எஸ். பெரேரா (இலங்கை இராணுவம்). 03,மூன்றாமிடம்: தேஷான் கவிந்த (ஜா-எல பிளாஷ் அணி). 04,நான்காமிடம்: சுரங்க ரணவீர. 05,ஐந்தாமிடம்: சிதும் பூர்ண. நாளை காலை 9:00 மணிக்கு கன்னொருவ விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு முன்னால் இரண்டாம் நாள் போட்டி ஆரம்பமாகும். Post navigation Lanka Ride පාපැදි සවාරිය අද (16) උදෑසන ලේක් හවුස් ආයතන ඉදිරිපිටින් ආරම්භ විය. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் மருந்து விசாரணை செயலி வெளியீடு.